Digital Arrest | "டிஜிட்டல் அரெஸ்ட்" - சென்னை மூதாட்டிக்கு நேர்ந்த அதிர்ச்சி
- "டிஜிட்டல் அரெஸ்ட்" - சென்னை மூதாட்டிக்கு நேர்ந்த அதிர்ச்சி,சென்னையைச் சேர்ந்த மூதாட்டியிடம், டிஜிட்டல் கைது என்ற பெயரில் ஏமாற்றி 24 லட்சம் ரூபாய் மோசடி செய்த கர்நாடக கும்பலை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
- தண்டையார்பேட்டையை சேர்ந்த 70 வயது மூதாட்டி சித்ரலேகா என்பவர் அளித்த புகாரின்பேரில், கர்நாடகாவை சேர்ந்த தேஜாஸ், பிரணவ், முகமது சமீர் ஆகியோரை மைசூரில் போலீசார் கைது செய்து, சென்னைக்கு அழைத்து வந்தனர். அவர்களிடமிருந்து 3 செல்போன்கள் மற்றும் வங்கி ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், மூவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.