முதலமைச்சரை பார்க்க மகனும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், இரவு 11 மணியளவில் அப்போலோ மருத்துவமனைக்கு வருகை தந்தார். முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவ்வப்போது மருத்துவமனைக்கு வருகை புரிந்து, தந்தையின் உடல் நலம் குறித்தும், மருத்துவமனையில் கொடுக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் கேட்டறிந்து வருகிறார். இந்நிலையில் இரவு 11 மணிளவில் மருத்துவமனைக்கு வருகை புரிந்த உதயநிதி ஸ்டாலின், ஓட்டுநர் இல்லாமல் தானே காரை ஓட்டி வந்து தந்தையை சந்தித்து சென்றார்.