துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது சொந்த தொகுதியான சேப்பாக்கம்- திருவல்லிக்கேணியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமை தொடங்கி வைத்தார். அமைச்சர்கள் சேகர்பாபு மா .சுப்பிரமணியன், தி.மு.க எம்.பி தயாநிதிமாறன், சென்னை மேயர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். துறை சார்ந்த அரங்குகளில் மனுக்கள் பதிவு செய்வதை பார்வையிட்ட துணை முதல்வர், முகாமில் பங்கேற்றவர்களிடம் கலந்துரையாடினார். அப்போது, 2 மனுதாரர்களின் கோரிக்கையை உடனே நிறைவேற்றி சான்றிதழையும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.