தமிழக முதல்வரை அவதூறாக பேசியதாக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீதான அவதூறு வழக்கு முடித்து வைக்கப்பட்டது. கடந்த 2023ம் ஆண்டு விழுப்புரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினை பற்றி அவதூறாக பேசியதாக வழக்கு தொடரப்பட்டது. விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்த போது சிவி சன்முகம் சார்பில் ஆஜரான வழகறிஞர்கள் இவ்வழக்கை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டதை சுட்டி காட்டினர். இதை ஏற்றுக்கொண்ட மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி மணிமொழி, இவ்வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.