Debenture | Muthoottu Mini Financiers | கடன் பத்திரங்களை வெளியிடும் முத்தூட் மினி ஃபைனான்சியர்ஸ்

Update: 2025-04-26 14:31 GMT

200 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் பத்திரங்களை பொது வெளியீட்டில் வெளியிடுவதாக முத்தூட் மினி ஃபைனான்சியர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த ஒவ்வொரு கடன் பத்திரத்தின் முகமதிப்பு ஆயிரம் ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மே 7ஆம் தேதி வரை இந்த கடன் பத்திரங்களை பெற்றுக்கொள்ளலாம் என்றும், 9.50% முதல் 10.75% வரையிலான வருடாந்திர வட்டி விகிதங்களை வழங்கும் என்றும், முத்தூட் மினி ஃபைனான்சியர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. 2022 முதல் 2024 வரை கடந்த மூன்று நிதியாண்டுகளில் முத்தூட் மினி ஃபைனான்சியர்ஸ் அதன் சொத்துக்கள் மேலாண்மை மற்றும் வரிக்குப் பிந்தைய லாபம் இரண்டிலும் வளர்ச்சியைக் காட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்