சென்னைக்கு வரும் சாலையை ரெண்டாக பிளந்து பீஸ் பீஸாக்கிய வெள்ளம்.. போக்குவரத்து துண்டிப்பு..

Update: 2024-12-03 03:06 GMT

கடலூர் - புதுச்சேரி - சென்னை சாலையில் தொடர்ந்து போக்குவரத்து துண்டிப்பு.

கடலூர் தென்பெண்ணை ஆற்றில் 2.4 லட்சம் கன அடி தண்ணீர் விடப்பட்டது.

இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்ட கிராமங்களும் நகர பகுதிகளும் பாதிப்பிற்கு உள்ளானது.

இந்த நிலையில் இன்று காலை தென்பெண்ணை ஆற்றில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு 40 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது.

தற்பொழுது கடலூருக்கு வரும் நீரின் அளவு ஒரு லட்சம் கனஅடியாக உள்ளது.

கடலூர் நகரில் தற்போது வெள்ள வெள்ளம் மெல்ல மெல்ல குறைய தொடங்கியுள்ளது.

கடலூர் -புதுச்சேரி -சென்னை இரண்டு வழி சாலையில் பெரியகங்கனாங் குப்பம் என்ற இடத்தில் சாலையில் ஒரு பக்கத்தில் தண்ணீர் சென்று கொண்டிருக்கும் நிலையில் மற்றொரு பக்கத்தில் சாலை சேதம் அடைந்துள்ளது.

இதன் காரணமாக கடலூர் புதுச்சேரி சென்னை சாலையில் தொடர்ந்து போக்குவரத்து இரண்டாவது நாளாக நிறுத்தப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்