மகா கும்பமேளா...தமிழக வீரர்களுக்கு வந்த சிக்கல்...தமிழக அரசு எடுத்த அதிரடி ஆக்சன்
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி - மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டி நடந்தது, அதுல பங்கேற்ற தமிழக வீரர்கள் ஆறு பேர் மற்றும் TEAM MANAGER ஒருத்தரும் நேத்து நைட் - கங்கா காவேரி எக்ஸ்பிரஸில் சென்னைக்கு Book செஞ்சிருக்காங்க- கும்பமேளா செல்லும் பக்தர்கள் கூட்டம் அதிகமா இருந்ததால - மாற்றுத்திறனாளி வீரர்களால ரயில் பெட்டிக்குள்ள கூட ஏற முடியவில்லை. டிரைனும் பிளம்பிருச்சு
- உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டியில் பங்கேற்ற தமிழக வீரர்கள், கும்பமேளா கூட்டத்தால் ரயிலில் ஏற முடியாமல் அங்கேயே காத்திருக்கின்றனர். தென்னிந்திய அணி சார்பில் தமிழகத்திலிருந்து ஆறு வீரர்கள் மற்றும் அணி மேலாளர் போட்டியில் கலந்துகொண்டனர். போட்டி முடிந்து ஊர் திரும்ப, கங்கா காவேரி எக்ஸ்பிரஸில் சென்னை செல்ல முன்பதிவு செய்தனர். இந்நிலையில், கும்பமேளா செல்லும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளதால் மாற்றுத்திறனாளி வீரர்கள் ரயிலில் ஏற முடியாததால் தவித்து வருகின்றனர்.