மீண்டும் மிரட்டும் கொரோனா - மதுரையில் நடந்த திடீர் மாற்றம்

Update: 2025-06-05 04:20 GMT

மதுரை விமான நிலையத்தில் சுகாதாரத்துறை சார்பில் 24 மணி நேரமும் 14 பேர் கொண்ட கொரோனா கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. ஸ்கேனர் வெப்பமானி மூலம் பயணிகளின் உடல்நிலை பரிசோதனை செய்யப்படுகிறது. உடல்நலம் குறைவாக இருப்பவர்களுக்கு வலையங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதனையும், கொரோனா தொற்றின் அறிகுறி உள்ளவர்களுக்கு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தனிமை வார்டுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொரானா தாக்கத்தின் தன்மையை பொறுத்து அரசு மருத்துவமனையில் தனிமை வார்டுகளில் மக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என மாவட்ட சுகாதார அலுவலர் மருத்துவர் குமரகுருபரன் கூறியுள்ளார்.

 

Tags:    

மேலும் செய்திகள்