வீட்டு வேலையை பாதியில் நிறுத்திய காண்ட்ராக்டர்கள்.. பாய்ந்த அதிரடி ஆக்சன்

Update: 2025-05-04 03:48 GMT

வீடு கட்ட ஒப்பந்தம் செய்துவிட்டு பணியை பாதியில் நிறுத்திய ஒப்பந்தக்காரருக்கு 11 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தவிட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம் விளமல் வடக்குத் தெரு பகுதியைச் சேர்ந்த முருகையனிடம் குருமூர்த்தி என்பவர் வீடு கட்டி தருவதாக சொல்லி 22 லட்சம் ரூபாயை வாங்கிக் கொண்டு , கட்டுமான வேலைக்களை பாதியில் நிறுத்தி இருக்கிறார். இதனால் முருகையன் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கின் இறுதி விசாரணையில் குருமூர்த்திக்கு 11 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்பளிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்