காவலர்-நடத்துநர் வாக்குவாதம்.. வெளியான புதிய வீடியோ

Update: 2024-05-24 13:52 GMT

வாரண்ட் உடன் அரசுப் பேருந்தில் கைதியை அழைத்துச் சென்ற காவலர் ஒருவர், டிக்கெட் எடுக்கச் சொன்ன நடத்துநருடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ வெளியாகி பரவி வருகிறது. சில நாட்கள் முன்பு நெல்லை, நாங்குநேரியில் அரசு பேருந்தில் பயணம் செய்த காவலர் ஒருவர், டிக்கெட் எடுக்க மறுத்து நடத்துநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இதேபாணியில் தற்போது வெளியாகியிருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்