#BREAKING || பினராயி விஜயனுக்கு CM ஸ்டாலின் திடீர் கடிதம்

Update: 2024-05-23 15:04 GMT

"சிலந்தியாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணியை நிறுத்தி வைக்க வேண்டும்". கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம். "சிலந்தியாற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டினால், அமராவதி ஆற்றில் நீர் வரத்து வெகுவாகக் குறையும் என தமிழக விவசாயிகள் அச்சம்". "தமிழகம் - கேரளா இடையேயான உண்மையான தோழமை உணர்வை நிலைநிறுத்தவும், பிரச்சினைக்கு தீர்வு காணவும், பணியினை நிறுத்தை வைக்க வேண்டும்". தடுப்பணை தொடர்பான திட்ட விவரங்கள் ஏதும் தமிழ்நாடு அரசிடமோ அல்லது காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திடமோ வழங்கப்படவில்லை - முதலமைச்சர் ஸ்டாலின். "திட்டம் குறித்த தற்போதைய நிலவரம், கேரளாவின் பவானி மற்றும் அமராவதி(பம்பார்) துணைப் படுகைகளுக்கான பெருந்திட்டம் ஆகிய முழு விவரங்களை அளிக்க வேண்டும்". பினராயி விஜயனுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.\

Tags:    

மேலும் செய்திகள்