Kanyakumari | லஞ்சம் கேட்ட பில் கலெக்டருக்கு பாடம் புகட்டிய குடிமகன்
ரூ.5,000 லஞ்சம் - பில் கலெக்டர் கைது
கன்னியாகுமரி மாவட்டத்தில் வரைப்பட சான்றிதழ் கொடுக்க ஐந்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய பேரூராட்சி அலுவலக பில் கலெக்டர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருவட்டார் அருகே ஏற்றக்கோடு பகுதியை சேர்ந்த சுபின் என்பவர் புதிதாக வீடுகட்ட வரைப்பட ஒப்புதலுக்காக ஆற்றூர் பேரூராட்சி அலுவலக பில் கலெக்டர் முருகனை சந்தித்துள்ளார். அப்போது அவர் ஐயாயிரம் தந்தால் வரைப்பட சான்று தருவதாக கூறியுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத சுபின் இது குறித்து லஞ்ச ஒழிப்பு துறையினரிடம் அளித்த புகாரின் பேரில் லஞ்சம் வாங்கிய போது பில் கலெக்டர் முருகனை மறைந்திருந்து லஞ்ச ஒழிப்பு துறையினர் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.