சித்திரை தேரோட்ட திருவிழா - விண்ணை பிளந்த `அரோகரா' கோஷம்.. நெல்லையில் கோலாகலம்

Update: 2025-05-05 10:09 GMT

நெல்லை மாவட்டம் வள்ளியூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் சித்திரை தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. கடந்த 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழாவின் 9ம் நாளில், சுவாமி மற்றும் அம்பாள் எழுந்தருளிய தேரை பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் வடம் பிடித்து இழுத்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசன ம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்