யுபிஎஸ்சி தேர்வில், தமிழகத்தில் நான் முதல்வன் திட்டத்தில் படித்த மாணவர் தேர்ச்சி பெற்றிருப்பதற்கு முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், நான்_முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்ற மாணவர், யுபிஎஸ்சி தேர்வில் தமிழ்நாட்டுத் தரவரிசையில் முதல்வனாகியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் திறன்களை மேம்படுத்தும் இந்தத் திட்டம், வருங்காலங்களில் லட்சக்கணக்கானோரின் வாழ்வில் ஒளியேற்றும் என்ற நம்பிக்கை, மகிழ்ச்சியாகி உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.