கொரியரில் போதை பொருள்..- இளைஞரை மிரட்டி பணம் பறித்த டம்மி ஆபிசர்ஸ்..

Update: 2024-05-26 02:45 GMT

சென்னை வடபழனியை சேர்ந்த ஸ்ரீதர் என்பவருக்கு மும்பையில் உள்ள கொரியர் சர்வீஸில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர், ஸ்ரீதர் பெயரில் உள்ள பார்சலை சுங்கத்துறை கைப்பற்றி இருப்பதாகவும் ,அதில் போதைப் பொருள் இருப்பதாகவும் கூறி மிரட்டி இருக்கிறார். மேலும் சுங்கத்துறை ஸ்ரீதர் மீது வழக்கு பதியாமல் இருக்க பணம் கேட்டு மிரட்டியதால், பயந்துபோன ஸ்ரீதர் ரூபாய் 40 ஆயிரம் வரை கொடுத்து இருக்கிறார். இதே போன்று மீண்டும் பணம் கேட்டு மிரட்டியதால் சந்தேகம் அடைந்த அவர், வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்து இருக்கிறார். இந்த கொரியர் மோசடி கும்பல் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்