Chennai | "பெப்சி உறுப்பினர்கள் யார் வந்தாலும் அடிப்போம்".. கொந்தளித்த ஆர்.கே.அன்புச்செல்வன்

Update: 2025-11-02 03:27 GMT

ஃபெஃப்சி யூனியன் என்ற பெயரில், தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை சிலர் அழிக்கின்றார்கள் என சிறுபட முதலீட்டு தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ஆர்.கே.அன்புச்செல்வன் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை நெசப்பாக்கத்தில் உள்ள அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த‌ அவர், எந்த சூழலிலும் பெஃப்சி அல்லாத நபர்களின் படப்பிடிப்பை நிறுத்தக் கூடாது என அச்சங்கத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி கண்டிக்க வேண்டும் என்றார். சிறு முதலீட்டு தயாரிப்பாளர்கள் சங்கத்தினரிடம் பிரச்சனை செய்தால் படப்பிடிப்பிற்கு செலவான தொகையை வாங்குவோம் என்றும் அவர் கூறினார். தங்களிடம் பிரச்சனை செய்யும் பெஃப்சி உறுப்பினர்கள் யாராக இருந்தாலும் தாக்குவோம் என்றும் அவர் ஆவேசத்துடன் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்