``ஏன் துப்புற''.. சென்னை தியேட்டரில் நடந்த அதிர்ச்சி - கொதித்தெழுந்த தாய்
சென்னையில் உள்ள திரையரங்கில் காலாவதியான குளிர்பானம் வழங்கப்பட்டதாக திரையரங்கு ஊழியர்களுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எழும்பூரில் உள்ள திரையரங்கில் படம் பார்க்க கொளத்தூரை சேர்ந்த நித்யா என்பவர் குடும்பத்தோடு வந்துள்ளார். இந்நிலையில் திரையரங்கில் உள்ள உணவகத்தில் குளிர்பானம் ஒன்றை நித்யா வாங்கியுள்ளார். அந்த குளிர்பானம் காலாவதியாக இருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து திரையரங்கு ஊழியர்களிடம் கேட்டதற்கு முறையாக பதிலளிக்காததால் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.