வேலைநிறுத்தத்தை மீறி துறைமுகம் சென்ற லாரிகள் தடுத்து நிறுத்தம், வேலை நிறுத்தத்தை மீறி சென்னையில் உள்ள பல்வேறு துறைமுக செல்லும் கனரக வாகனங்களை சங்க நிர்வாகிகள் தடுத்து நிறுத்தியதால் பதற்றம் நிலவுகிறது. ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 9 ஆம் தேதி முதல் துறைமுக லாரி ஒட்டுநர்கள் வேலைநிறுத்த தில் ஈடுபட்ட வந்த நிலையில் சில சங்கத்தினர் லாரிகளை இயக்கி வந்த தாக கூறப்படுகிறது. இந்நிலையில் காசிமேடு துறைமுகத்திற்கு வந்த லாரிகளை ஒரு பிரிவினர் தடுத்து நிறுத்தினர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவியதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். துறைமுக நிர்வாகம் பிரித்தாளும் சுழ்ச்சியில் ஈடுபடுவதாகவும் ஒட்டுநர்கள் குற்றம் சாட்டினர்.