Grindr APP மூலம் கொலை, கொள்ளை, வழிப்பறி - குறிவைத்து நடக்கும் குற்ற சம்பவங்கள்
கிரிண்டர் ஆப்ப தடை செய்யனும்னு சென்னை காவல்துறை ஆணையர் அருண் தமிழக அரசுக்கு கடிதம் எழுதி இருக்காரு. Queer சமூகத்தினர் மத்தியில பிரபலமான APP தற்போது போலீஸுக்கு பிராப்ளம் ஆனது எப்படி? LGBT Queer சமூகத்தினர், அவங்களோட உறவுகள டாப் அப் பண்ணிக்கவும், உணர்வுகள Refresh பண்ணிக்கவும், தான் கடந்த 2009 வது வர்ஷம் கிரண்டர் ( Grindr ) என்கிற ஆப்ப அமெரிக்காவ சேர்ந்த Tech தொழிலதிபர் Joel Simkhai லான்ச் பண்ணாரு. மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதலே இல்லனு நாம விமர்சிக்கக்கூடிய Feelings-க்கு இந்த Grindr App மதிப்பளிச்சு இருக்கு... அதன் காரணமா, மாற்று பாலினத்தவர்களும், பால் புதுமையினரும் இந்த ஆப்போட ரெகுலர் யூசர்ஸ்ஸா மாறி இருக்காங்க... Western Countries-ல Grindr ஆப் உண்மையிலயே பலரோட வாழ்க்கைய வசந்தமா மாற்றி இருக்குனு பலரும் பாசிட்டிவ்வ ரிவியூவ் கொடுத்திருக்கிறத நம்மாள கண்கூடா பார்க்க முடியுது. அப்படியே இந்த கதைய அமெரிக்காவுல கட் பண்ணிட்டு இந்தியாவுல ஓப்பன் பண்ணோம். Grindr APP மூலம் கொலை, கொள்ளை, வழிப்பறினு நம்ம நாட்டுல இதோட ரிவியூவ்ஸே ஊடகங்கள் வெளியிட்டுள்ள க்ரைம் செய்திகளால நிரம்பி வழியுது. கிரைண்டர் ஆப் மூலமா இத்தனை நாட்களா ஓரின சேர்க்கையாளர்கள மட்டுமே குறிவெச்சி குற்ற சம்பவங்கள் அதிகளவுல நடந்து வந்தது. ஆனா, தற்போது Synthetic Drugs விற்பனையும் கிரைண்டர் ஆப் மூலமா அமோகமாக நடப்பது தெரியவர காவல்துறையினரே அதிர்ந்து போயிருக்காங்க.
சமீப காலமா தமிழகத்துல உள்ள கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில மெத்தபெட்டமைன், கொக்கைன் போன்ற Synthethic Drugs-ஸோட புழக்கம் அதிகரிச்சு இருக்கிறதா தொடர்ச்சிய பல புகார்கள் எழுந்தது. இதைதொடர்ந்து Anti-Narcotic Intelligence Unit என்கிற ஸ்பெஷல் டீம்ம உருவாக்கின காவல்துறையினர் பல இடங்கள்ல அதிரடி ரெய்டு நடத்தி நூற்றுக்கணக்கான குற்றவாளிகள கைது செய்ததோடு, பல கோடி ரூபா மதிப்புள்ள Synthetic Drugs-ஐயும் பறிமுதல் பண்ணாங்க. பிடிப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைல பத்துல அஞ்சு பேர் கிரைண்டர் ஆப் மூலமா தான் போதை பொருள் விற்பனையாளர்களோட தொடர்பு ஏற்படுத்திகிட்டது தெரியவந்திருக்கு.
அதுமட்டுமில்லாம, இந்த ஆப் யூஸ் பண்ற பால் புதுமையினருக்கும் கூட இது தொடர்ந்து அச்சுறுத்தல இருக்கிறதால சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் தமிழக அரசுக்கு இந்த ஆப்ப தடைசெய்யக்கோரி கடிதம் எழுதி இருக்கிறதா தற்போது தகவல் வெளியாகி இருக்கு. நம்ம ஊர்ல நீங்க சிங்கிளா ? எங்களோட மிங்கிளா ஆக வரீங்களான்னு ? இப்படி புது Connections-அ ஊக்கவிக்க கூடிய எத்தனையோ டேட்டிங் செயலிகள் இருக்கும் போது Grindr App மட்டும் ஏன் பிரச்சனைக்குரியதா இருக்குனு தெரிஞ்சிக்க நடந்த சம்பவங்கள சட்னு டிகோட் பண்ணோம். அப்போ தான் Grindr App யூஸர்ஸ் இந்த ஆப்ப ரகசியமா யூஸ் பண்றது தெரியவந்தது. அதன் காரணமாவே சமூக விரோதிகள் அவங்கள ஈசியா விக்டீம் ஆக்கிடுறதையும் நம்மாள புரிஞ்சிக்க முடிஞ்சது. மற்ற டேட்டிங் செயலிகள் மாதிரியே இந்த Grindr ஆப்பையும் Normalize ஆன மனநிலையோட பொதுமக்கள் அணுகுற வரைக்கும் கிரைண்டர் ஆப் மட்டுமில்லாம இதுப்போன்ற எத்தனை ஆப்கள் வந்தாலும் அது நிச்சயமா ஆபத்துல தான் முடியும்.