Chennai Kite Festival | சர்வதேச பட்டம் விடும் திருவிழா - களைகட்டிய சென்னை வானம்

Update: 2025-08-16 09:20 GMT

சர்வதேச பட்டம் விடும் திருவிழா - மின்னொளியில் ஒளிர்ந்த பட்டங்கள்

சென்னை கோவளம் அருகே நடைபெறும் சர்வதேச பட்டம் விடும் திருவிழாவில் இரவு நேரத்தில் மின்னொளியில் ஒளிர்ந்த பட்டங்கள் பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது. திருவிடந்தையில் சர்வதேச பட்டம் விடும் திருவிழா நடைபெற்று வருகிறது. வரும் ஞாயிறு வரை நடைபெறும் சர்வதேச பட்டம் விடும் திருவிழாவில், வெளி மாநிலங்கள் மற்றும் இந்தோனேசியா, பிரான்ஸ், சிங்கப்பூர், மலேசியா, உள்ளிட்ட நாடுகளில் இருந்து வந்துள்ள வெளிநாட்டவர்கள் பட்டங்களை பறக்க விடுகின்றனர். முதன் முறையாக இரவு நேரத்தில் எல்.இ.டி. விளக்குகள் பொருத்தப்பட்ட பட்டங்கள் வானில் பறக்கவிடப்பட்ட நிலையில் சுற்றுலா பயணிகள் கண்டுகளித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்