Chennai | Crime | ATM-ல் பணம் எடுக்கும் போது உஷார் மக்களே... இப்படியும் நடக்கலாம்

Update: 2025-09-17 17:03 GMT

அம்பத்தூர் கள்ளிகுப்பம் அருகே எஸ்பிஐ ஏடிஎம் உள்ளது. அங்கு விமசீலா என்பவர் ஏடிஎம்மில் பணம் எடுத்த போது, பணம் வராமல் பணம் எடுத்ததாக குறுஞ்செய்தி மட்டும் வந்துள்ளது. ஏடிஎம்மில் பணம் வரும் இடத்தில் மெல்லிய கருப்பு நிற பிளாஸ்டிக் அட்டை வைக்கப்பட்டிருந்தது. இதை பார்த்த அவர், காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளார். காவல்துறை எஸ்பிஐ அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். இதே போல் ஒரகடம் பகுதியிலும் நூதன முறையில் திருட்டு சம்பவம் நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்