சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகன நிறுத்தத்திற்கான, மாதாந்திர பார்க்கிங் பாஸ்கள், பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் நிறுத்தப்பட உள்ளதாக மெட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. சிங்கார சென்னை அட்டைக்கு முழுமையாக மாற திட்டமிட்டுள்ளதால், முதற்கட்டமாக 11 மெட்ரோ நிலையங்களில் பயண அட்டை விற்பனை மற்றும் ரீசார்ஜ் செய்யும் வசதி நிறுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய வண்ணாரப்பேட்டை, காலடிப்பேட்டை, திருவொற்றியூர் தேரடி, திருவொற்றியூர், நந்தனம், சின்னமலை, OTA - நங்கநல்லூர் சாலை, மீனம்பாக்கம், எழும்பூர், கீழ்ப்பாக்கம், செனாய்நகர் ஆகிய மெட்ரோ நிலையங்களில் உடனடியாக இந்த வசதிகள் நிறுத்தப்படுவதாக தெரிவித்துள்ளது.