கொலை செய்த கையோடு ஏறிய கொலையாளி.. ஆட்டோ டிரைவர் செய்த தரமான சம்பவம் - சினிமால கூட இப்படி நடக்காது..
கொலை செய்த கையோடு ஏறிய கொலையாளி.. ஆட்டோ டிரைவர் செய்த தரமான சம்பவம் - சினிமால கூட இப்படி நடக்காது.. ரியல் ஹீரோ நீங்க தான்.. குவியும் பாராட்டு
சென்னை ஆதம்பாக்கத்தில் தந்தையை குத்தி கொலை செய்த மகனை சாதுர்யமாக செயல்பட்டு, காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. கங்கா நகரைச் சேர்ந்த ஆதித்ய நாராயணன் என்பவர் மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த நிலையில் தனது தந்தை முரளிதரனை ஆத்திரத்தில் கத்திரிக்கோலால் குத்தி கொலை செய்துள்ளார். இந்த கொலைக்கு அவரது தாயும் உடந்தையாக இருந்த நிலையில், இருவரும் அப்துல் மாலிக் என்பவரின் ஆட்டோவில் தப்பிக்க முயன்றுள்ளனர். ஆட்டோவில் சென்றபோது இருவரும் பேசிக்கொள்வதை கேட்ட ஆட்டோ ஓட்டுநர் சாதுர்யமாக செயல்பட்டு இருவரையும் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். கொலைக் குற்றவாளிகளை பிடிக்க சாதுர்யமாக செயல்பட்ட ஆட்டோ ஓட்டுநர் அப்துல் மாலிக்கை போலீசார் வெகுவாக பாராட்டினர்.