"பணத்த கொடுத்து வக்கீல வாங்கிட்டான்..சாகுறத தவிர வேற வழியில்லை.." - சென்னையில் அதிர்ச்சி

Update: 2025-01-23 06:46 GMT

"பணத்த கொடுத்து வக்கீல வாங்கிட்டான்..சாகுறத தவிர வேற வழியில்லை.." - சென்னையில் அதிர்ச்சி

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள வத்தலக்குண்டு ஆறுமுகம் நகர் பிரதான சாலையில், ஆக்கிரமிப்புகளை இடிக்க போலீசார் பேரிகார்டுகளை இறக்கியதால், மக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். நீதிமன்ற உத்தரவுப்படி ரவிசங்கர் என்பவருக்கு சொந்தமான இடம் என்பதால், அங்கிருந்து குடியிருப்பு வாசிகள் காலி செய்ய வேண்டுமென போலீசார் தெரிவித்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகள் தர்ணாவில் ஈடுபட்டனர். 40 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் தங்களை வெளியேற்றினால், தற்கொலை செய்வதை தவிர வேறு வழியில்லை என அவர்கள் சோகத்துடன் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்