மலையாள சினிமாவால் TN Schoolsல் நடந்த மாற்றம் - மாணவர்களுக்கு மகிழ்ச்சி!

Update: 2025-07-15 03:39 GMT

ப வடிவில் இருக்கை - ஆசிரியர்கள் வரவேற்பு - மாணவர்கள் மகிழ்ச்சி

கேரளாவை தொடர்ந்து தமிழ்நாட்டிலும் பல்வேறு பள்ளிகளில் வகுப்பறைகளில் ப வடிவில் மாணவர்கள் இருக்கை அமைக்கப்பட்டு வருகிறது. மலையாளத்தில் வெளியான "ஸ்தானார்த்தி ஸ்ரீ குட்டன்" என்ற படத்தில் கடைசி பெஞ்ச் நடைமுறையை தவிர்க்க ப வடிவில் மாணவர்களுக்கு இருக்கை ஒதுக்கப்பட்ட காட்சி வைரலானது.

இதனையடுத்து தமிழக அரசு பள்ளிகளிலும் ப வடிவில் வகுப்பறை இருக்கை முறையை கொண்டு வர பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியது.

இதனை செயல்படுத்தும் விதமாக, கோவை காந்திபுரத்தில் உள்ள மாநகராட்சி பள்ளியில் ப வடிவில் இருக்கைகளை அமைத்து வகுப்புகள் நடத்தப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்