’’வாயில்லா ஜீவனை அடச்சி வைக்கலாமா?’’ கொதித்தெழுந்த விலங்கு நல ஆர்வலர்கள்
திருச்சியில் தெரு நாய்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி விலங்கு நல ஆர்வலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தெரு நாய்களை கட்டுபடுத்துவது தொடர்பாக அண்மையில் உச்சநீதிமன்ற உத்தரவு பிறப்பித்தது. இதனை கணடித்து நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திருச்சி ரயில்வே ஜங்ஷன் அருகே PEOPLE FOR ANIMALS பீப்பிள் ஃபார் அனிமல்ஸ் அமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.