"இந்நேரம் என் உசுரே போய்ருக்குமே"-ஆத்திரத்தில் டாக்டரிடம் சண்டை போட்ட பெண்
சென்னை மாதவரத்தில், தவறான பல் சிகிச்சை அளிக்கப்பட்டதால், பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொளத்தூர் பகுதியை சேர்ந்தவர் சமீனா. இவர் பல் வலி காரணமாக, மூலக்கடையில் உள்ள தனியார் பல் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றார். ஆனால் அவருக்கு மருத்துவர் சிகிச்சை அளிக்காமல், அவரின் உதவியாளர் அளித்த தவறான சிகிச்சை காரணமாக, கூடுதலாக இரண்டு பற்கள் உடைந்து பாதிப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக, சமீனா மீண்டும் அதே மருத்துவரை அணுகிய நிலையில், பல் மருத்துவர் அசட்டையாக பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக சமீனா அளித்துள்ள புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்...