ஊருக்குள் போகாமல் சென்ற அரசு பேருந்து... ஓட்டுநர், நடத்துநர் மீது பாய்ந்த அதிரடி
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் அரசு பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் 6 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி போக்குவரத்துக் கழக பொது மேலாளர்கள் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர். மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டும் ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் செல்லாமல் பேருந்து இயக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, 6 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.