தள்ளுவண்டி காய்கறி கடை மீது அரசு பேருந்து தறிக்கெடுத்து ஓடியதால் மூன்று பேர் காயம்
கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதியில் அண்ணா பேருந்து நிலையம் உள்ளது இங்கு தினசரி பெரம்பலூர், பழனி, அரியலூர், பெங்களூர், ஜெயங்கொண்டம், மற்றும் திட்டக்குடி அதன் சுற்றுவட்டார கிராமப்புற பகுதிகளுக்கு 50க்கும் மேற்பட்ட பேருந்துகள் வந்து செல்கின்றனர் இங்கே ஒரு நாளைக்கு 10,000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர் இந்த நிலையில் இடையக்குறிச்சியில் இருந்து திட்டக்குடி வந்த அரசு பேருந்து பேருந்து நிலையத்தின் வெளியே பயணிகளை இறக்கிவிட்டு மீண்டும் முள்ளுக்குறிச்சி செல்வதற்காக பேருந்து நிலையத்தில் உள்ளே சென்று வண்டியை திருப்பும் பொழுது அப்பொழுது டிரைவரை கட்டுப்பாட்டை இழந்து தறிக்கடுத்து ஓடி அங்கு இருந்த தள்ளுவண்டி காய்கறி கடை உள்ளே புகுந்து அதில் இருந்த வியாபாரி தீபா மற்றும் இரண்டு பேருக்கு காயம் ஏற்பட்டது பின்னர் அவர்களை திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் இது குறித்து திட்டக்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் திட்டக்குடி பேருந்து நிலையத்தில் அதிக தள்ளுவண்டி காய்கறி கடைகள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர் இதனால் பேருந்து நிலையத்தில் உள்ளே செல்ல முடியாமல் ஓட்டுநர்கள் அவதிப்பட்டு வருகின்றனர் பலமுறை நகராட்சி நிர்வாகம் அந்த ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றக் கூறியும் அவர்கள் அகற்றாமல் காலம் கடத்தி வருகின்றனர் தற்பொழுது பேருந்து நிலையத்தில் பேருந்து ஆக்கிரமிப்பு கடையில் மோதி பேருந்து நின்றதால் அங்கு இருந்த மூன்று பேர் காயம் ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.