மின்னல் வேகத்தில் மோதிய பஸ் - டேங்கர் லாரி - துடிதுடித்து பலி... அலறிய பயணிகள்

Update: 2025-04-18 11:10 GMT

தர்மபுரி காரிமங்கலம் அருகே தனியார் பேருந்தும், டேங்கர் லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இளைஞர் பலியான நிலையில் சுமார் 30 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். பெரியாம்பட்டி அருகே தர்மபுரி நோக்கி அதிவேகமாக சென்ற தனியார் பேருந்து எதிரே வந்த லாரியுடன் மோதி விபத்து ஏற்பட்டது.இதில் இருவரது நிலை கவலைக்கிடமாக உள்ள நிலையில் விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே தனியார் பேருந்துகள் அதிவேகமாக இயக்கப்படுவதாலே அடிக்கடி இது போன்ற

விபத்து நிகழ்ந்து உயிரிழப்புகள் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்