British Airlines flight | பிரிட்டிஷ் ஏர்லைன்ஸ் விமானம் சென்னையில் இருந்து மூன்றரை மணி நேரம் தாமதம்..
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு தினமும் அதிகாலை 3.30 ம்ணிக்கு வந்து விட்டு மீண்டும் காலை 5.35 மணிக்கு பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் லண்டன் செல்லும்.
அதுப்போல் லண்டனில் இருந்து சென்னை வந்த பிரிட்டிஷ் ஏர்லைன்ஸ் விமானம் இன்று காலை 5.35 மணிக்கு புறப்படாமல் தொழில் நுட்ப கோளாறு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. விமானப் பொறியாளர்கள், தொழில்நுட்ப கோளாறை சீரமைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தொழில் நுட்ப கோளாறு சரி செய்த பின் சுமார் மூன்றரை மணி நேரம் தாமதமாக காலை 9.05 மணிக்கு, 287 பயணிகளுடன் சென்னையில் இருந்து லண்டன் புறப்பட்டு சென்றது. இதனால் விமானத்தில் பயணித்த 287 பயணிகள், சென்னை விமான நிலையத்தில் பல மணி நேரம் காத்திருந்து, கடும் அவதி அடைந்தனர்.