பார்க்க கூடாததை பார்த்த சிறுவன் - பீர் குடிக்க வைத்தே கொன்ற காதலன்

Update: 2025-07-04 02:49 GMT

ஒசூர் அருகே தேன்கனிக்கோட்டை சாலையில் உள்ள திருமுக்கு வளைவு வனப்பகுதியில் சிறுவன் சடலமாக மீட்கப்பட்ட வழக்கில், 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்த போலீஸ் விசாரணையில், மாவனட்டி பகுதியை சேர்ந்த சிவராஜ், மஞ்சுளா தம்பதியின் மகனான 8 ஆம் வகுப்பு படித்து வந்த ரோஹித், அதே பகுதியை சேர்ந்த புட்டண்ணன் என்பவரின் 21 வயது மகனான மாதேவனும், ஒரு இளம்பெண்ணும் தனிமையில் இருந்ததை நேரில் கண்டதாக கூறப்படுகிறது. இதனால், சிறுவன் இது குறித்து வெளியில் சொல்லி விடுவானோ என்ற அச்சத்தில், கர்நாடகாவை சேர்ந்த மற்றொரு மாதேவன் உதவியுடன், சிறுவனை நைசாக பேசி காரில் கடத்தி சென்று காருக்குள்ளேயே பீர் குடிக்க வைத்து, மயக்கமடைந்த சிறுவனை கொலை செய்தது, தெரியவந்தது. இது குறித்து 2 இளைஞர்களையும் கைது செய்த போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்