PM ஆபீஸுக்கு வெடிகுண்டு மிரட்டல் - யாருனு தெரிஞ்சா அதிர்ச்சி ஆகிடுவீங்க
பிரதமர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக நாகையை சேர்ந்த இளைஞரை மத்திய புலனாய்வு போலீசார் கைது செய்தனர். விசாரணையில், அவர் நாகை மாவட்டம் வெளிப்பாளையம் பகுதியை சேர்ந்த கணேஷ் குமார் என்பது தெரியவந்தது. மேலும் கணேஷ்குமார் மது பழக்கத்திற்கு அடிமையாகி, மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்ததும், அவரது மனைவி குழந்தையுடன் பிரிந்து சென்றதும் தெரியவந்தது. அத்துடன் அவர் எதற்காக பிரதமர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.