நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உள்ள குடியிருப்பு பகுதியில், கருஞ்சிறுத்தை, சிறுத்தை, கரடி உள்ளிட்ட வன விலங்குகள் உலா வருவதால், மக்கள் அச்சத்தில் உள்ளனர். கடந்த 31ம் தேதி முதல் 2ம் தேதி வரை, மக்கள் நடந்து செல்லும் நடைபாதையில் வன விலங்குகள் சர்வசாதாரணமாக உலா வருகின்றன.