சாய்ந்த பாஜக-வின் கொடிக்கம்பம்... பறிபோன மூதாட்டியின் கண்

Update: 2024-03-17 12:56 GMT

சென்னை கொருக்குப்பேட்டையில் தெருமுனை கூட்டத்திற்காக நடப்பட்டிருந்த பாஜக கட்சியின் கொடிக்கம்பம் மூதாட்டி மேல் சாய்ந்து விழுந்ததில் மூதாட்டி படுகாயமடைந்தார்... பாரதிநகரைச் சேர்ந்த 68 வயது மூதாட்டி விஜயா தனது மருமகனுடன் மருத்துவமனை சென்று விட்டு பைக்கில் திரும்பிக் கொண்டிருந்த போது சாலை ஓரத்தில் நடப்பட்டிருந்த பாஜகவின் கொடி கம்பம் விஜயா மேல் விழுந்து, மூக்குக் கண்ணாடி உடைந்து வலது கண்ணில் கண்ணாடித் துண்டு குத்தி படுகாயம் அடைந்தார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்