புயல் வேகத்தில் வந்த பைக்..சாலையில் நடந்து சென்ற நபருக்கு நடந்த கொடூரம்

Update: 2025-07-05 09:49 GMT

தென்காசி மாவட்டம், செங்கோட்டை பிரானூர் பார்டர் பகுதியில் சாலையோரம் நடந்து சென்ற மணிகண்டன் என்பவர் மீது பைக் மோதிய விபத்தில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். குற்றாலம் சாலையில் நடந்த இந்த விபத்தில், பைக்கை ஓட்டி வந்த நபருக்கு ஓட்டுனர் உரிமம், இன்சூரன்ஸ் உள்ளிட்டவை இல்லை எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து செங்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சூழலில், தற்போது விபத்து குறித்த சிசிடிவி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்