"என் கண் முன்னாடி..என் பொண்டாட்டி கிட்ட.."ஒரு போலீஸ் என்றும் பாராமல் ரோட்டிலேயே விழுந்த மரண அடி

Update: 2025-05-03 07:30 GMT

சென்னை ஓட்டேரியில் கணவருடன் சென்ற பெண்ணிடம் ஆபாச சைகை செய்த விவகாரத்தில் பெண்ணின் கணவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இருசக்கர வாகனத்தில் கணவருடன் சென்று பெண்ணிடம் காவலர் தினேஷ், ஆபாச சைகை செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அப்பெண்ணின் கணவர் காவலரை தாக்கி காவல் நிலையத்தில் ஒப்படைத்த நிலையில், குற்றம்சாட்டப்பட்ட காவலர் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டார். மேலும் பெண்ணின் கணவர் மீது ஆபாசமாக பேசுதல், தாக்கி காயத்தை ஏற்படுத்துதல் மற்றும் கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்