Bear | Forest | ஊரையே அலறவிட்ட கருப்பு கரடி.. போராடி பிடிக்கபட்ட வீடியோ..

Update: 2025-12-08 14:56 GMT

நீலகிரி மாவட்டம் குன்னூரில் கடந்த ஓராண்டாக வனத்துறைக்கு போக்கு காட்டி வந்த கரடி, கூண்டில் சிக்கியுள்ளது. குன்னூர் நகரில் பெட்போர்டு, உபாசி, சிம்ஸ் பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் உலா வந்து பொதுமக்களை அச்சுறுத்திய கரடியை பிடிக்க வனத்துறையினர் கடந்த ஓராண்டாக பல்வேறு இடங்களில் கூண்டு வைத்திருந்தனர். இந்தநிலையில், கன்னி மாரியம்மன் கோவில் பகுதியில் வைக்கப்பட்ட கூண்டில் கரடி சிக்கியதால் பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர். இதையடுத்து கரடி அடர்வனத்திற்குள் விடப்பட்ட வீடியோவும் வெளியாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்