Bargur | எம்.எல்.ஏ காரை வழிமறித்த காட்டு யானை... பர்கூர் மலைப்பகுதியில் திக்திக்

Update: 2025-09-14 09:37 GMT

எம்.எல்.ஏ காரை வழிமறித்த காட்டு யானை... பர்கூர் மலைப்பகுதியில் திக்திக்

பர்கூர் மலைப்பகுதியில எம்.எல்.ஏ போன காரை, காட்டு யானை வழிமறிச்சி துரத்த பாத்துச்சு.. அரை மணி நேரத்துக்கு அப்புறம் யானை வனப்பகுதிக்கு போனதுனால, எம்.எல்.ஏ. புறப்பட்டு போனாரு...

ஈரோடு மாவட்டம் பர்கூர் மலை கிராமத்தில் நடமாடும் நியாய விலைக் கடைகளின் துவக்க விழாவில் பங்கேற்க அந்தியூர் எம்.எல்.ஏ வெங்கடாஜலம் சென்றார். பர்கூர் மலைச் சாலையில் வெங்கடாஜலம் சென்றபோது அவருடைய காரை ஒற்றை காட்டு யானை வழிமறித்து காரை துரத்த முற்பட்டது. சுதாரித்துக் கொண்ட வாகனத்தின் ஓட்டுநர் காரை பின்னோக்கி இயக்கினார். அரை மணி நேரமாக முகாமிட்டிருந்த யானை வனப்பகுதிக்குள் சென்றதையடுத்து, நீண்ட நேரமாக காத்திருந்த எம்.எல். ஏ வெங்கடாசலம் புறப்பட்டு சென்றார்.

Tags:    

மேலும் செய்திகள்