சென்னை சென்ட்ரலில் 12,000 உடல்களை மீட்ட பாடி முருகன் - வேதனையில் சொன்ன வார்த்தைகள்
சென்னை சென்ட்ரலில் 12,000 உடல்களை மீட்ட பாடி முருகன் - வேதனையில் சொன்ன வார்த்தைகள்
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உடல்களை மீட்ட பாடி முருகன் என்றழைக்கப்படும் செல்வராஜ், மாத சம்பளத்தில் வேலை தருமாறு முதல்வருக்கு கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த 36 ஆண்டுகளாக சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில் பாதைகளில் உயிரிழந்தவர்களின் உடல்களை எடுத்துச் செல்லும் பணியை செய்து வரும் இவர் 15 வயதில் வீட்டைவிட்டு வெளியேறி, சென்ட்ரல் ரயில் நிலையத்திலேயே இருப்பதாக கூறியுள்ளார். சிதறிக்கிடக்கும் உடற்பாகங்களை சேகரிப்பது மிகவும் கடினமாக இருந்ததாகவும், அதற்கு தொடக்கத்தில் கூலியாக வெறும் 8 ரூபாய் தான் கிடைத்தாகவும், தற்போது வரை தனது மாத வருமானம் 5ஆயிரம் முதல் 6 ஆயிரம் தான் என்ற நிலைமையிலேயே உள்ளதாக வருத்தம் தெரிவித்தார்.