சாலையில் ஆட்டோ தலைகுப்புற கவிழ்ந்து சறுக்கி செல்லும் சிசிடிவி காட்சி..!
கன்னியாகுமரி மாவட்டத்தில், மருத்துவமனைக்கு நோயாளியை அழைத்து சென்ற ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்த சிசிடிவி காட்சி, காண்போரை பதற வைத்துள்ளது. ரீத்தாபுரத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவர் சிகிச்சை பெறுவதற்காக ஆட்டோவில் சென்றபோது, ஆனக்குழி என்ற இடத்தில், அவர் சென்ற ஆட்டோ நடுரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அக்கம் பக்கத்தினர், அவர்களை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில், விபத்து குறித்த சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.