பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு.. இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்
சென்னை மற்றும் பிற நகரங்களில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் இன்று முதல் விரிவாக்கம் செய்யப்படுகிறது.
தமிழகத்தில் அரசு தொடக்கப் பள்ளிகளில் 5-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித சூசையப்பர் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் குழந்தைகளுக்கு காலை உணவை வழங்கி, இந்த திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதில், சிறப்பு விருந்தினராக பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் பங்கேற்க உள்ளார்.