``இப்போ சகாயத்துக்கு பாதுகாப்பு தர போறீங்களா..இல்லன்னா நாங்க..'' - சீறிய கோர்ட்
சகாயம் IAS வழக்கு - போலீசிடம் மதுரை நீதிமன்றம் கேள்வி
மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் பகுதியில் நடைபெற்ற கனிமவள முறைகேடு வழக்கு விசாரணை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது
இன்று வழக்கு விசாரணையில் முன்னாள் IAS அதிகாரி சகாயம் வழக்கு தொடர்பாக சாட்சியம் அளிக்க நேரில் நீதிமன்றத்திற்கு வரவில்லை. வழக்கை விசாரித்த நீதிபதி ஏன் அவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வில்லை என கேள்வி எழுப்பதோடு
அவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படுமா
இல்லை என்றால் மத்திய பாதுகாப்பு படையினரின் பாதுகாப்பு வழங்க உத்தரவிட நேரிடும் என நீதிபதி தெரிவித்து
வழக்கு விசாரணையை தற்காலிகமாக ஒத்திவைத்தார்