Andhra Pradesh | Workers | கொத்தடிமையாக இருந்த தொழிலாளர்கள்.. 8 குழந்தைகள் உட்பட 13 பேர் மீட்பு
- ஆந்திராவில் கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட 13 பேர், குடியாத்தம் வருவாய்த்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
- வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள கிராமங்களின் இரண்டு குடும்பத்தை சேர்ந்த 8 குழந்தைகள் உட்பட 13 பேர் ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே உள்ள செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக இருந்த நிலையில் மீட்கப்பட்டனர். பின் ஆந்திர வருவாய்த்துறையின் கடிதத்தை முறைப்படி பெற்று, 13 பேரையும் குடியாத்தம் வருவாய்த்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து அவர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.