ஈரோட்டில் ஏறுவதற்கு முன்னால் கிளம்பிய அரசு பேருந்தை, இருசக்கர வாகனத்தில் துரத்தி பிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது. கவுந்தப்பாடி புதூரை சேர்ந்த மூதாட்டி பெத்தாயியும், மகள் தமிழரசியும் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிக்கைக்காக வந்துள்ளனர். சிகிக்சையை முடித்து கவுந்தப்பாடி செல்லும் பேருந்தில் ஏறும்போது, பெத்தாயி ஏறிய நிலையில், தமிழரசி ஏறுவதற்கு முன்னதாக பேருந்து கிளம்பியுள்ளது. அப்பேருந்தை விரட்டிப்பிடித்து, வாக்குவாதம் செய்த தமிழரசி, மீண்டும் அதே பேருந்தில் ஏறி சென்றிருக்கிறார்.