சாக்லேட் வாங்க கடைக்கு போன 8வயது சிறுமி - கடை ஓனர் செய்த அசிங்கம்..ஓசூரில் அதிர்ச்சி
ஓசூரில் சாக்லேட் வாங்க கடைக்கு வந்த 8 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட மளிகைக்கடை உரிமையாளர் போக்சோ சட்டத்தில் கைது செய்யபட்டார். ஓசூரில் 8 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக சிறுமியின் பெற்றோர் ஓசூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் விசாரணை நடத்தியதில் அதே பகுதியை சேர்ந்த மளிகை கடை உரிமையாளரான சிவசங்கர் என்பவர் மளிகை சிறுமியிடம் அத்துமீறி பாலியல் சீண்டலில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சிவசங்கரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.