Ajithkumar Case | Nikitha CBI | ``நிகிதாவின் நகை உண்மையிலேயே திருடு போனதா? நகை எங்கே?’’ CBI தீவிரம்
சிவகங்கை, திருப்புவனத்தில் நகை திருடபட்டதாக நிகிதா, காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் அஜித்குமார் கைது செய்யப்பட்டு, போலீசார் விசாரணையில் கொலை செய்யப்பட்டார். இந்த நிலையில் நகை திருட்டுப்போனது உண்மையா? அல்லது திருடப்பட்ட நகை எங்கு போனது என்ற கோணத்தில் நிகிதா கொடுத்த புகாரை நீதிமன்றம் விசாரிக்க உத்தரவிட்டது. முதற்கட்டமாக, ஆட்டோ டிரைவர் அருண்குமார், பழக்கடை ஈஸ்வரன், அஜித் குமாரின் நண்பர் வினோத் குமார், கோவில் ஊழியர் ராஜா, சக்தி ஈஸ்வரன் உள்ளிட்டோரிடம் சிபிஐ விசாரனை செய்தது.