Ajithkumar Case அஜித்குமார் வழக்கில் முக்கிய சாட்சியை கொல்ல முயற்சி? காரில் போகும் போது நடந்த என்ன?

Update: 2025-10-25 02:48 GMT

அஜித்குமார் கொலை வழக்கு - சாட்சி மீது கொலை முயற்சி?

அஜித்குமார் கொலை வழக்கில் முக்கிய சாட்சியான சக்தீஸ்வரனை கொலை செய்ய முயற்சி நடந்துள்ளதா என போலீசார் விசாரித்து வருகின்றனர். அஜித்குமாரை போலீசார் தாக்கும் முக்கிய வீடியோவை வெளியிட்டவர் சக்தீஸ்வரன். இவருக்கு கொலை மிரட்டல்கள் வந்ததால், அவருடன் எப்போதும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் ஒருவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் மதுரை புதூர் பகுதியில் வைத்து சக்தீஸ்வரன் காரை, கொரியர் வாகனம் ஒன்று இடித்தது. காருக்கு உள்ளே போலீஸ் இருப்பதை பார்த்ததும் நிற்காமல் சென்றது. இது கொலை முயற்சியாக இருக்கலாம் என்று கருதிய சக்தீஸ்வரன், கொரியர் வாகனத்தை மடக்கி பிடித்து புதூர் போலீசாரிடம் ஒப்படைத்தார். கொரியர் வாகனத்தின் ஓட்டுநர் சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலை சேர்ந்த கார்த்திக் என்பது தெரியவந்துள்ளது. அவரிடம் விசாரணை நடத்திய போலீசார் நடந்த விஷயத்தை எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்