அஜித் Reference; கூலியில் உண்மையான ஹீரோ யார்..? மேடையில் மனம் திறந்த ரஜினி

Update: 2025-08-03 03:14 GMT

கூலி படத்தின் உண்மையான ஹீரோ இயக்குநர் லோகேஷ் கனகராஜ்தான் என நடிகர் ரஜினிகாந்த் சிலாகித்து பேசியது, ரசிகர்கள் மத்தியில் பெரும் கரகோஷத்தை எழுப்பியது.

கூலி படத்தின் இசை வௌயீட்டு விழாவில் பேசிய அவர், இப்படத்திற்கு வானளவில் எதிர்பார்பு வந்திருப்பதாகவும், இவையெல்லாம் இயற்கையாக வந்தவை என்றும் தெரிவித்துள்ளார். சக நடிகரான சத்தியராஜ் பற்றி குறிப்பிட்டு பேசிய ரஜினிகாந்த், தங்கள் இருவருக்கும் கருத்து முரண்பாடு இருந்தாலும், மனதில் பட்டதை பேசுவார் என குறிப்பிட்டுள்ளார்.மேலும் நாகர்ஜூனாவின் இளமையான உடல் அமைப்பு குறித்து பேசிய ரஜினிகாந்த், தனக்கு தலையில் இருந்த முடி கூட போய்விட்டதாக குறிப்பிட்டு, மங்கத்தா திரைப்படத்தில் இடம்பெறும் நானும் எத்தனை நாள்தான் நல்லவனா நடிக்கிறது என்ற வசனத்தை குறிப்பிட்டு இப்படத்தில் நடிகர் நாகர்ஜூனா வில்லன் ரோலில் நடித்திருப்பதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

"கூலி படத்தின் உண்மையான ஹீரோ இயக்குநர் லோகேஷ் கனகராஜ்". நடிகர் சத்யராஜ் மனதில் பட்டதை பேசுபவர் என புகழாரம். நாகர்ஜூனாவை குறிப்பிடும் போது 'மங்கத்தா' வசனம் பேசிய ரஜினிகாந்த் "ஹீரோவாக மட்டுமே பார்க்கப்பட்ட நகார்ஜூனா வில்லன் ரோலில் நடித்துள்ளார்"

Tags:    

மேலும் செய்திகள்