கொலை செய்துவிட்டு கூட்டத்தோடு கூட்டமாக வேடிக்கை பார்த்த கொலைகாரன்

Update: 2025-07-23 03:06 GMT

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே மனைவி, குழந்தை கண்முன்னே கணவர் படுகொலை செய்யப்ப‌ட்ட வழக்கில், திடீர் திருப்பமாக கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவியே தீர்த்துக்கட்டியது அம்பலமாகியுள்ளது. குப்பம் பாளையம் கிராமத்தை சேர்ந்த பாரத் என்பவர், திங்கட்கிழமை மாலை, மனைவி மகளுடன் பைக்கில் சென்றபோது வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை நேரில் பார்த்த 3 வயது குழந்தையிடம் போலீசார் விசாரித்த போது, அழுதுகொண்டே 'சஞ்சய் மாமா தான் அப்பாவை வெட்டினார்' என்று குழந்தை கூறியுள்ளது. இதையடுத்து, பாரத்தின் மனைவி ந‌ந்தினிக்கும், எதிர்வீட்டை சேர்ந்த ச‌ஞ்சய்க்கும் இடையே தகாத உறவு இருந்த‌து தெரிய வந்த‌தால், அவர்களை பிடித்து விசாரித்தபோது திடுக்கிடும் தகவல் அம்பலமானது. தகாத உறவை கண்டித்த‌தால் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்ய நீண்ட நாட்களாக ந‌ந்தினி திட்டமிட்டு, ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்து வந்து, சஞ்சய் மூலம் படுகொலை செய்த‌து தெரிய வந்த‌து. கொலை செய்த சஞ்சய், கத்தியை புதரில் வீசிவிட்டு, சம்பவம் நடந்த இடத்தில் கூட்டத்தோடு கூட்டமாக எதுவும் தெரியாத‌து போன்று நின்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்